இத்தலத்தில் இராமபிரான் ஜடாயுவுக்கு தர்ப்பணம் செய்வதற்கு, பூமியில் குழி தோண்டி கங்கையை ஆவாஹனம் செய்து ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கியதாகவும், அதனால் இத்தலத்திற்கு திருபுள்குழி (புள் - ஜடாயு பறவை) என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மூலவர் விஜயராகவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு மரகதவல்லித் தாயார் என்பது திருநாமம். ஜடாயுவுக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இக்கோயிலில் உற்சவர் எழுந்தருளும் குதிரை வாகனம் உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது.
இராமானுஜரும், மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|